வழக்கமான உடற்பயிற்சி அல்லது 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது… இரண்டில் எது சிறந்தது..? வாக்கிங் கார்டியோ உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக ஏராளமான உடல்நல கோளாறுகள் இளவயதினருக்கு கூட ஏற்படும் நிலையில், நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சிலர் ஜிம்முக்கு சென்று 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கின்றனர். இன்னும் சிலர் தினமும் 10,000 ஸ்டெப்ஸ்கள் என்ற வீதத்தில் தவறாமல் வாக்கிங் செல்கின்றனர். ஆனால் இரண்டில் எது சிறந்த நன்மைகளை அளிக்கும் என்ற குழப்பத்திற்கு நிபுணர்கள் தரும் பதில் பற்றி இங்கே பார்க்கலாம்.
குறைந்தபட்சம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்யப்படும் மிதமான மற்றும் அதி தீவிர உடற்பயிற்சிகளின் கலவை ஆரோக்கியமாக இருக்க உதவும் என பரிந்துரைக்கப்படுகிறது. வாரத்திற்கு 5 நாட்கள் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட அளவுகோலை அடைய உதவும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும் ஒருவருக்கு உடற்பயிற்சிகள் செய்ய நேரம் இல்லை என்றால் அல்லது அதி தீவிர யிற்சிகளை செய்ய முடியாத நிலை இருந்தால் நாளொன்றுக்கு 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எவ்வாறாயினும் உடல் செயல்பாடுகளின்றி உட்கார்ந்தே இருக்காமல் சுறுசுறுப்பாக இயங்குவது ஆரோக்கியத்திற்கு முக்கியம். வழக்கமான உடற்பயிற்சி நன்மைகளை அளிப்பதோடு உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பதை அனைவரும் அறிவோம். தினமும் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பது ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்பதற்கு நிபுணர்கள் அளிக்கும் பதிலை பார்ப்போம்.
இரண்டில் எது சிறந்தது என்ற கேள்விக்கு நிபுணர்கள் தரும் பதில் உடற்பயிற்சி மற்றும் வாக்கிங் ஆகிய இரண்டுமே ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பொதுவான நன்மைகளையே வழங்குகின்றன. இரண்டில் எதை நீங்கள் தேர்வு செய்தாலும் கலோரிகளை எரிக்க மற்றும் எடையை குறைக்க உதவுகின்றன.
0 Comments